×

800 மீட்டர் ஓட்டத்தில் உசேன் போல்ட்!

ஒலிம்பிக் போட்டி வரலாற்றில் மகத்தான சாதனை வீரராக முத்திரை பதித்த உசைன் போல்ட் (ஜமைக்கா), முதல் முறையாக 800 மீட்டர் காட்சி ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்றுள்ளார். ஒலிம்பிக் 100 மீட்டர், 200 மீட்டர் மற்றும் 4X100 மீ. தொடர் ஓட்டம், 4X400 மீ. தொடர் ஓட்டத்தில் 8 தங்கப் பதக்கம் வென்றவரும், உலக சாம்பியன்ஷிப்பில் 11 தங்கப் பதக்கங்களை முத்தமிட்டவருமான போல்ட் (34 வயது), 2016 ரியோ ஒலிம்பிக்சுடன் ஓய்வு பெற்றார். இந்த நிலையில், ஜமைக்காவில் நேற்று நடந்த 800 மீ. காட்சி ஓட்டப் பந்தயத்தில் அவர் பங்கேற்றார். 800 மீட்டர் ஓட்டத்தில் போல்ட் பங்கேற்பது இதுவே முதல் முறையாகும்.

மிகவும் ஜாலியாகவும் ரிலாக்சாகவும் ஓடிய போல்ட் 2 நிமிடம், 40 விநாடியில் பந்தய தூரத்தை கடந்தார். இது குறித்து கூறுகையில், ‘இந்த பந்தயத்திற்காக நிறைய பயிற்சி செய்த பிறகே ஓடினேன். அதனால் எளிதாக ஓடிவிடலாம் என்று நினைத்தது தவறு என்பது இப்போது புரிகிறது. வியர்த்துக் கொட்டி, நுரையீரலில் தீ வைத்தது போல எரிகிறது. 800 மீ. ஓட்டத்தில் பங்கேற்கும் வீரர்களுக்கு ஒரு ராயல் சல்யூட். அதே சமயம் இந்த சவாலை மிகவும் அனுபவித்தேன். மறுபடியும் களத்துக்கு திரும்பும் எண்ணமில்லை’ என்றார்.

Tags : Hussein Bolt , Racing, Hussein Bolt, Olympics
× RELATED எருது விடும் போட்டியில் 142.5 மீட்டர்...